Published By
பகலவன் On Wednesday, September 7th 2011. Under
முக்கிய செய்திகள் Edit Post
புதுடில்லி: நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் உயர் வகுப்பு கட்டணங்களை உயர்த்துவது குறித்து, ரயில்வே துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக, ரயில்வே வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ரயில்வே துறையில் எரிபொருள் செலவானது, அதன் மொத்தச் செலவில் 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், கடந்த எட்டு ஆண்டுகளாக பயணிகள் கட்டணத்தை ரயில்வே துறை உயர்த்தாததால், ரயில்வேயின் நிதி நிலைமையும் திருப்திகரமாக இல்லை. எனவே, ரயில் ...
Continue Reading
மொபைல் போனில் பாடல்கள் பதிவு செய்ய வேண்டுமானால் இனி அதற்கான உரிமையை பெற வேண்டும் என்று சவுத் இன்டியா டிஜிட்டல் மியூசிக் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிட் நிறுவனம் அறிவித்துள்ளது. எஸ்.ஐ.டி.எம்.எம்., என சுருக்கமாக அழைக்கப்படும் சவுத் இன்டியா டிஜிட்டல் மியூசிக் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிட் நிறுவனம் தமிழ், மலையாளம், உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், பக்தி பாடல்கள், கிராமிய பாடல்கள், சாஸ்திரீய சங்கீத பாடல்களை 50 முதல் 60 சதவீதம் வரை ...
Continue Reading
Published By
பகலவன் On Wednesday, September 7th 2011. Under
தமிழ்நாடு Tags: ஆழ்துளை,
சிக்கி தவிக்கும்,
சிறுவன்,
மீட்க Edit Post
நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ளது சவளக்காரன் குளம். அதன் அருகே உள்ள கைலாசம் நாதபுரத்தில் ஒரு சுடலை மாட கோயில் உள்ளது. அதன் அருகில் நேற்று 200 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு போடப்பட்டது. அதனை ஒரு சாக்கை வைத்து மூடிவிட்டு சென்றனர். இன்று காலை 11 மணி அளவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சேர்மேன் நாடார் மகன் 3 வயது சுதர்சதன். இந்த சிறுவன் அந்த சாக்கை ...
Continue Reading
Published By
பகலவன் On Wednesday, September 7th 2011. Under
தமிழ்நாடு Tags: bypoll,
ramadoss,
இடைத் தேர்தல்,
பாமக,
ராமதாஸ் Edit Post
கடலூர்: திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த பாமக தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து அதிலிருந்து வெளியேறிவிட்டது. இப்போது பாமக எந்தக் கூட்டணியிலும் இல்லை. இந் நிலையில் திருச்சி மேற்குத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடக்கவுள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ...
Continue Reading
முதுகுளத்தூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி. ஜெ. அப்துல் கலாம் அவர்கள் கலந்து கொள்ளும் "கல்வி-அறிவியல் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி" முதுகுளத்தூரில் வரும் 15-ம் தேதி நடக்கிறது. முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் "கல்வி-அறிவியல் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி" வரும் 15-ம் தேதி நடக்கிறது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிவாசல் மேல் ...
Continue Reading
பெல்லாரி சுரங்க அதிபரும், கர்நாடக மாஜி மந்திரியுமான ஜனார்த்தன ரெட்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுரங்க மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சுரங்க தொழிலில் கொடி கட்டி பறந்து வந்த அவர் ஆடம்பரம் என்றால் அலாதி பிரியம். அரண்மனை போன்ற வீடு, வெளிநாட்டு சொகுசு கார்கள், ஹெலிகாப்டர் என ராஜபோகத்தை அனுபவித்து வந்தவர். குறிப்பாக, ஆடம்பர கார்கள் என்றால் ரெட்டிக்கு கொள்ளை ஆசையாம். கடந்த 2009ம் ...
Continue Reading
Published By
பகலவன் On Wednesday, September 7th 2011. Under
மருத்துவம் Tags: blackcreeper,
Medicine,
எலும்புருக்கி நோய் Edit Post
பயனற்ற தாவரம் எனக் கருதப்படுபவை எல்லாம் அதிசயத்தக்க மருத்துவப் பயன்களை கொண்டுள்ளன. இந்தியா முழுவதும் பெரும்பாலும் வேலிகளில் காணப்படும் உதர்கொடி தாவரத்தின் இலைகள், தண்டு,வேர் போன்றவை மருத்துவப் பயன் கொண்டுள்ளது. முழுத் தாவரமும் பல விதமான நோய்களை தீர்க்க வல்லது. இதனால் இன்றைக்கும் இந்த தாவரம் ஆதிவாசிகளால் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்திய மருத்துவ நூலான பைசாஜ்ய ரத்னதவளி, ஸாரங்கதாரா ஆகியவற்றில் உதர்கொடி முக்கிய மூலிகையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் குர்சிடின், லுபியோல்,டோட்ரிஅகோன், ...
Continue Reading
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மே மாதமும் ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. அப்போது உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அந்த குண்டுவெடிப்பு தீவிரவாதிகளின் ஒத்திகையாக இருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கப்படுகிறது. டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த நான்கு மாதங்களில் 2வது முறையாக குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் எந்த உளவுத் தகவலும் இல்லை. கடந்த மே 25ம் தேதி உயர்நீதிமன்றத்தின் 7வது நுழைவாயில் பகுதியில் குண்டு வெடித்தது. அது லேசான ...
Continue Reading
சென்னை: சட்டசபையிலிருந்து இன்று காலை திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூண்டோடு வெளிநடப்புச் செய்தனர். சட்டசபை இன்று காலை கூடியதும் சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறளை வாசித்து அதற்குரிய விளக்கத்தைக் கூறினார். அதன் பின்னர் சபை அலுவல்கள் தொடங்கின. அப்போது திமுக உறுப்பினர்கள் துரைமுருகன் தலைமையில் எழுந்து வெளியேறினர். பின்னர் வெளியே வந்த திமுகஉறுப்பினர்களிடம் எதற்காக இந்த வெளிநடப்பு என்று செய்தியாளர்கள் கேட்டபோது, முறையாக பேசிய, அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க முயன்ற எங்களை நேற்று ...
Continue Reading
Published By
பகலவன் On Wednesday, September 7th 2011. Under
இந்தியா Tags: 2g scam,
cbi,
dayanidhi maran,
தயாநிதி மாறன் Edit Post
டெல்லி: ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரனை மிரட்டியது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் விற்கப்பட்டவுடன் அதற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கியது ஆகியவை தொடர்பாக தயாநிதிமாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று கூறிய சிபிஐ இப்போது அவருக்கு எதிராக விரைவில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பல்டி அடித்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தை முன்பு நிர்வகித்து வந்த சிவசங்கரன் சிபிஐ முன்பு ஆஜராகி தயாநிதி மாறனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். ...
Continue Reading
ஈரோடு: சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ள தமிழ் சினிமா காஞ்சனா படத்தைப் பார்த்த பள்ளி மாணவன் ஒருவன், பேய் பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளான். ஈரோடு ராஜாஜிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் தண்டபாணியின் மகன் இளவரசன். பதினைந்து வயது சிறுவனான இவன், அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளவரசனும் அவனது நண்பர்களும் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா என்ற திரைப்படம் பார்த்துவிட்டு ...
Continue Reading
வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் மீண்டும் ரஜினியின் ராணா படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற செய்தி கோடம்பாக்கத்தை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்ட சரித்திரப் படம் ராணா. ரஜினியின் கனவுப் படம் இது. ரஜினியே எழுதிய கதை இது. கேஎஸ் ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன் பிரதான நாயகியாக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் ஏவிஎம்மில் தொடங்கியது. இதில் பங்கேற்ற ...
Continue Reading
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படப்பிடிப்புக்கு திடீர் என்று வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த ரஜினியும், கமலும் திட்டமிட்டுள்ளனர். இதனால் படக் குழுவினர் ஒரு வித எதிர்பார்ப்போடு தான் பணிபுரிகின்றனர். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்தில் தனுஷும், கமல்ஹாசன் மகள் ஸ்ருதியும் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. கமல், ரஜினி குடும்பங்கள் பல ஆண்டுகளாக நட்புடன் பழகி வருவதால் ஸ்ருதி தனுஷுடன் பிரண்ட்லியாக இருக்கிறார். என்ன ...
Continue Reading
சென்னை: கிழக்கு கடற்கரை சாலை கன்னியாகுமரி வரை நீடிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் 110 விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார் ஜெயலலிதா. அதில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் பல்வேறு உள் கட்டமைப்புகளில் சாலை உள்கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில், சாலைப் போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளின் வேகமான வளர்ச்சிக்கு சாலைக் கட்டமைப்பின் வளர்ச்சி அடிப்படையாக உள்ளது. இதன் அடிப்படையில், சென்னை முதல் ...
Continue Reading
சென்னை: நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவினர் சிறைகளில் உல்லாசமாக இருப்பதாக சட்டசபையில் தேமுதிக புகார் கூறியது. இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது என்று அறிவுறுத்தினார். சட்டசபையில் இன்று பேசிய தேமுதிக உறுப்பினர் அருண் சுப்பிரமணியம், சிறைகளில் அடைக்கப்படும் திமுகவினர் அங்கு உல்லாசமாக இருக்கின்றனர் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, அது குறித்து ஆதாரம் இருந்தால் அளிக்கலாம்; ஆதாரம் இல்லாமல் ...
Continue Reading
Published By
பகலவன் On Wednesday, September 7th 2011. Under
இந்தியா Tags: delhi bomb,
டெல்லி குண்டுவெடிப்பு Edit Post
டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜிகாத் அல்-இஸ்லாமி தீவிரவாத (Huji-ஹூஜி) அமைப்பு பொறுப்பேற்புள்ளது. இது தொடர்பாக அந்த தீவிரவாத இயக்கத்திடமிருந்து இ-மெயில் வந்துள்ளது. இந்தத் தகவலை மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (National Investigation Agency) உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது குறித்து முழுமையாக விசாரித்த பின்னரே ஹூஜிக்கு இதில் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று என்ஐஏ டைரக்டர் ஜெனரல் சின்ஹா கூறியுள்ளார். மும்பையில் நடந்த குண்டு ...